Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா பரவல்…. மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்…. போடப்படும் தடுப்பூசிகள்…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தடுப்பூசி செலுத்தாதவர்களை போடவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுவிட்சர்லாந்து நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து சென்ற வாரம் 3033 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஆனால் இந்த வாரம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4692 ஆகும். இது சென்ற வாரத்தை விட இந்த வாரம் 55% அதிகமாகும். இந்த கொரோனா தொற்றினால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 97% பேர் டெல்டா வகை வைரஸால் ஏற்பட்டதாகும்.  இந்த நிலையில் ஆறுதல் அளிக்கும் ஒரு விஷயம் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் இதுவரை ஒருவர் மட்டுமே பலியாகியுள்ளார்.

இந்த வாரம் மட்டும் 48 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இது சென்ற வாரத்தை விட 34ஆக அதிகரித்துள்ளது. இதில் வருத்தத்துக்குரிய விஷயம் தடுப்பூசியை செலுத்தி கொள்ளாதவர்களை பற்றி தான். ஆகவே தடுப்பூசி செலுத்தாதவர்களை போடவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.

Categories

Tech |