Categories
உலக செய்திகள் கொரோனா

அதிகரித்த கொரோனா பாதிப்பு…. இனி இது இலவசம்…. அரசின் அதிரடி முடிவு….!!

கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்றுக்கான பரிசோதனையை இலவசமாக செய்ய பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா தொற்றின் தாக்கம் பிரான்சில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டின் அரசு அதிக அளவு கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்ய  முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு நடவடிக்கைகளை நீக்கிய பின்பு கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் பிரான்ஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவர்களின் பரிந்துரை இன்றி கொரோனா பரிசோதனைகள் இலவசமாக கிடைக்க செயல்படுகின்றனர். வெள்ளிக்கிழமை வெளியான புள்ளிவிவரத்தின் கீழ் மொத்தம் 1,80,528 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு 30,192 பேர் உரிழந்துள்ளனர்.

 

எனவே சனிக்கிழமை அன்று வெளியான அரசாங்க உத்தரவின்படி தொற்றினை கண்டறியும் பி.சி.ஆர் நாசி ஸ்வாப் சோதனைகள் தேவைக்கேற்ப இலவசமாக கிடைக்கும். இரண்டு மாத ஊரடங்கிற்கு பிறகு மே மாதத்தில் கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்டது முதல் புதிதாக தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக 1,000 மேல் அதிகரித்துள்ளது.

Categories

Tech |