Categories
உலக செய்திகள்

இவ்வளவு பேரா….? வெற்றி பெற்ற செயலி…. நன்றி தெரிவித்த டிக்டாக் நிறுவனம்….!!

குறுகிய காலத்தில் அதிக அளவு வாடிக்கையாளர்களை பெற்று தந்ததால் டிக்டாக் நிறுவனம் மக்களுக்கு தங்களது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

உலகில் அதிக அளவு பயனாளர்களை கொண்டது டிக்டாக் செயலி ஆகும். இதில் இசையுடன் நடனம் மற்றும் தனித்திறமைகளை காணொளியாக எடுத்து வெளியிடுவர். தற்பொழுது இந்தியாவில் மட்டும் பலக்கோடி பேர் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்  தினந்தோறும் 5.5 கோடி வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர்.

மேலும் இப்பொழுது மாதம் 100 கோடி பேர் இதனை உபயோகிக்கின்றனர் என்று டிக்டாக் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக குறுகிய காலத்தில் மாபெரும் வெற்றியை பெற்று தந்ததற்காக வாடிக்கையாளர்களுக்கு தங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அந்த செயலியின் நிறுவனம் கூறியுள்ளது. இதனையடுத்து மற்ற சமூக வலைதளங்களான முகநூல் மாதம் 350 கோடி பயனாளர்களையும் யூடியூப் 345 கோடி பயனர்களையும் பெற்றுள்ளது.

அதிலும் டிக்டாக் சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனத்தின் செயலியாக இருந்தாலும் இதனை அதிகமாக அமெரிக்கா, ஐரோப்பா, பிரேசில் போன்ற நாடுகளில் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கடந்த ஆண்டு மத்திய அரசு இந்தியாவில் 59 செயலிகளை தடை செய்தது. அதில் சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் டிக்டாக் உள்ளதால் அதனையும் தடை செய்தது என்பது குறிபிடத்தக்கது.

Categories

Tech |