பிரபல சீரியல் ஒன்றில் நடிக்கும் நடிகையின் சம்பளமானது மற்ற நடிகர்களின் வருமானத்தை விட அதிகமாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
விஜய் டிவி தொலைக்காட்சி நிறுவனம் பல்வேறு தொடர் கதைகளை இயக்கி வருகிறது. அதில் பிரபலமான தொடர்களின் பட்டியலில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று. இந்தக் கதையானது ஒரு குடும்பப் பெண்ணின் வாழ்வியல் போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலை பற்றிய முன்னோட்டம் ஆனது எப்படி காட்டப்பட்டதோ அதே போலவே தொடரின் கதை களமும் நகர்கிறது. மேலும் இந்த தொடர்கதையில் பல்வேறு அதிரடியான திருப்பங்களும் காட்டப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பாக்கியலட்சுமி தொடர்களில் நடிக்கும் நடிகர்களின் தினசரி வருமானம் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் முக்கிய நபராக இருக்கும் பாக்கியலட்சுமி கதாபாத்திரதில் நடிக்கும் சுசித்ரா தான் அதிக சம்பளம் வாங்குவதாக தெரிய வந்துள்ளது. அவரின் ஒரு நாள் வருமானம் 15,000 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.