அதிக சம்பளம் வாங்குவது விஜயா அல்லது அஜித்தா என்பது தொடர்பாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் மாஸ்டர் படத்துக்கு விஜய் 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதே போன்று அஜீத் ஒரு படத்துக்கு 45 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார் என்று தெரிகிறது. இதனிடையில் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி வந்த ரஜினி, அண்ணாத்த படத்துக்கு 58 கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ளார்.
இதனையடுத்து சூர்யா 25 கோடி ரூபாய், தனுஷ் 17 கோடி ரூபாய், விஜய்சேதுபதி 12 கோடி ரூபாய், கார்த்தி 10 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு விஜய் ஒரே திரைப்படத்தில் 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.