Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தமாக 7660…. திரண்டு வந்த வேட்பாளர்கள்…. போலீஸ் பாதுகாப்பு….!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேட்பாளர்கள் தங்களுடைய ஆதரவாளர்களுடன் அலுவலகத்திற்கு திரண்டு வந்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கின்ற 7 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தங்களுடைய ஆதரவாளர்களுடன் அலுவலகத்தில் குவிந்துள்ளனர். இதனால் வேட்புமனு தாக்கல் செய்கின்ற ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் அனைத்தும் பரபரப்பாக காணப்பட்டது. இதன் காரணத்தினால் அப்பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து இம்மாவட்டத்தில் மொத்தம் 13 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு 95 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1634 பேரும், 282 ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 144 பேரும், ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு 684 பேரும் வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கின்றனர். மேலும் மொத்தமாக 2648 பதவிகளுக்கு 7660 நபர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கின்றனர்.

Categories

Tech |