ஒவ்வொருனாலும் நாம் விடியலை புத்துணர்ச்சியோடு எதிர்கொள்ளலாம், இந்த நான்கு விஷியங்களை செய்தால்.? அவற்றால் நமக்கு ஏற்பட கூடிய நன்மைகள் என்ன.?
அதிகாலை எழுவது:
ஒரு மனிதனுக்கு முதலில் சிறந்த ஆரோக்கியமே தூக்கம் தான். டிவி, செல்போன் ஆகியவற்றை இரவு நேரங்களில் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள்.
அதிகாலை 5, 6 மணிக்கெல்லாம் எழுவது பழக்கமாக வேண்டுமென்றால், இரவு 9, 10 மனுக்குல தூங்குவதை கட்டாயமாக்கி கொள்ளுங்கள். விடியற்காலை தூக்கம் தானாக கலைந்துவிடும்.
அதிகாலையில் நாம் சுவாசிக்கும் காற்று, நம் உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுப்பது மட்டுமில்லாமல் நம் உடலில் சுவாச மண்டலத்தை நல்ல முறையில் பணிபுரிய செய்யும்.
அதிகாலையில் நாம் அனைவரும் நடைப்பயிற்சி, யோகா, உடற்பயிற்சி என்று ஏதாவது ஒன்றை செய்து கொள்ளுங்கள், இனியதாக அமையும். இவைதான் நோய் நொடியில்லா, மருந்தில்லா ஆரோக்கிய வாழ்விற்கு அடித்தளம்.
சூரிய கதிர்கள் உடல் மேல் படுதல்:
தலையில் நீர் கோர்ப்பு, தலைவலி, நீர்பாரம்,ஆகியவைகள் நாம் தலைக்கு குளித்து விட்டு சரியாக தலையை துவட்டவில்லை என்றால் இது எல்லாம் ஏற்படும். அதனால் குளித்த பின்னர் பத்து நிமிடங்கள், நம் உடல் மீது சூரிய ஒளி படும்படி நிற்பதால் உடலில் இருக்கும் தேவையற்ற நீர் வெளியேறிவிடும்.
இன்றைக்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நம்மிள் பெரும்பாலானோருக்கும் அதிக உடல்நலக்குறைபாடுகள் வருவதற்கு காரணமே, சூரிய ஒளி நம்மீது படாததுதான்.
காலையில் 6 – 8 மணி நேரத்திற்குள், 3 – 10 நிமிடங்கள் வரை மிதமான சூரிய ஒளி நம் உடல் மீது படுமாறு நிற்கலாம். சூரிய ஒளி நம் உடல் மீது படுவதால், இரத்த ஓட்டம் சீராக இயங்கும்.
உடலில் உள்ள லட்சக்கணக்கான செல்களும் நன்றாக வேலை செய்யும். தோல் நோய்கள் வரவு கட்டுப்படும்.
தினமும் நம் உடல் மீது சூரிய ஒளி படவேண்டும் என்பதற்குத்தான், சூரிய நமஸ்காரம் செய்யும் முறையை நம் முன்னோர்கள் கடைபிடித்தனர்.
அதிகாலை குளிர்ந்த நீரில் குளிங்கள்:
இன்றைக்கு பாத்ரூமில் ஹீட்டரில் குளிப்பதைத்தான் அனைவரும் விரும்புகின்றனர். பொதுவாக நம் உடல் வெப்பமாக இருக்கும்பொழுது, உடல் சூட்டைத் தணிக்க குளிர்ந்த நீரினைக் கொண்டு அதிகாலை குளியுங்கள்.
தூய்மையான குளிர்ந்த நீரை குடிப்பதாலும் நம் உடலில் வியர்வையின் வழியாக சூட்டை வெளியேற்றும் சிறந்த வழிகளாகும்.
அருவியில், ஆறு, குளத்தில், வீட்டில் குளிப்பது என மூன்று வகையான குளியல்கள் உள்ளன. அதில் நீர் நம்மை அடிக்கும் குளியலான அருவியில் குளிப்பதுதான் உடல் செல்களை நன்றாகச் செயல்படத்தூண்டும்.
அடுத்து நாம் நீரினை அடிக்கும் நீச்சல் செய்யும் முறையான ஆற்றில், குளத்தில் குளிப்பதாலும் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இவ்விரண்டு முறைகளையும் இன்றைய இயந்திரமயமான உலகில் பெரும்பாலானோரால் கடைபிடிப்பது கடினம் என்பதோடு, நகரப்பகுதியினரால் செய்யவும் முடியாது.
அதனால் குளிப்பதே உடல் சூட்டைத் தணிப்பதற்காக என்பதால், எடுத்தவுடனே தலையில் நீர் ஊற்றுவதால் உடல் சூடு மீண்டும் கால் பாதத்துக்குதான் செல்லும். அதனால் முதலில் கால் பாதத்தில் இருந்து மேல் பாகங்களில் படுமாறு ஊற்றி இறுதியாக தலைக்கு தண்ணீரை ஊற்ற வேண்டும்.
இப்படி தினமும் காலையில் 6 – 7 மணிக்குள் குளித்துவிட வேண்டும். மூன்றாவதாக வீட்டில் குளிப்பதுதான் இதற்கு நல்ல முடிவு.
காலை உணவு:
ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான ஆற்றலில், அதிகபட்ச ஆற்றலைக் கொடுப்பவை காலை உணவுகள் தான். மாறுபட்ட உணவு முறைகள், துரித உணவுகளைச் சாப்பிடுகின்றனர் அதனால் காலை நேரம் பலருக்கும் பசி எடுப்பதில்லை.
உடல் நலன் அதிகம் பாதிக்கப்படுவதே நாம் காலை உணவை தவிர்ப்பதுதான். அத சரியான நேரத்தில் கடைபிடியுங்கள்.