அதிகாலை எழுவதால் ஏற்படும் புத்துணர்ச்சி பயன்கள்:
இறைவன் நமக்கு கொடுத்த பரிசு அதிகாலை, அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது. நம் முன்னோர்கள் விடியற்காலை எழுந்து பல வேலைகளை சலிப்பு இல்லாமல் செய்வார்கள். அனால் இன்று நாம் இப்பொது இருக்கும் காலகட்டத்தில் எப்பொழுது தூங்குவது எப்போது, எழுந்திருப்பது எப்போது என்று கூட, வரைமுறை இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் இப்பொழுது நாம் அனைவரும் நம் உடல்நிலையை இயற்கைக்கு மாறாக மாற்றி வருகிறோம். அதனாலோ என்னவோ நம் உடலில் அத்தனை நோய்கள் வர வழி கொடுக்கிறோம். அணைத்து மறந்து நம் தாத்தா, பாட்டி, முன்னோர்கள் வழியில் செல்லவோம், வரும் நோய்களுக்கு குட் பாய் சொல்லுவோம்.
அதிகாலையில் எழுந்து பாருங்கள் ஒரு நாளாவது காலை அதிக இரைச்சல் அமைதியாக மனதிற்கு மகிழ்ச்சி அளிக்க கூடியதாக, அந்த நேரத்தில் இருக்கும் இனிமையான காற்றும், இயற்கையின் அழகும் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும், நம் மூளை டென்ஷன் இல்லாமல் அமைதியாக சந்தோசமாக இருக்கும்.
மூளைக்கு செல்லும் நரம்பின் துவாரத்தில் இருக்கும் நீர், கலக்கமில்லாமல் பரிசுத்தமாக இருக்கும், சித்த மருத்துவதிலும் இதைத்தான் சொல்லுகிறார்கள். இதனால் நம் மனத்திலோ அல்லது மூளையில் ஏற்படும் நேர்மறைச் சிந்தனைகளை வளர்ந்து மன அழுத்தத்தைக் குறைக்கும் ஹார்மோன்களைத் தூண்டுவதற்கும் பயன்படுகிறது.
பூமி விடியற்காலை தான் குளிர்ச்சி அடைந்து நிறைவாக இருக்கும். அப்போதுதான் உடலில் வளர்சிதை மாற்றங்கள், பல்வேறு செயல்பாடுகள் காரணமாக வாத, பித்த, கபமாகிய மூன்று உயிர்தாதுகளும் திடமாக நிலைபெற்று, சீரான ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
முக்கியமான விஷியம் வாழ்க்கையில் மன தைரியமும், அதீத நம்பிக்கை வருவதற்காக கூட விடியற்காலையில் எழுந்து பழகுங்கள் இதை ஆராய்ச்சியார்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதிகாலையில் குழந்தைகளுக்கு பாடங்களை சொல்லி கொடுங்கள், படிக்கச் வையுங்கள் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அதனால் தான் காலை எழுந்ததும் படிப்பு என்று பாடி சென்றிருகிக்கிறார்.
நேரம் இல்லை என்னால எந்த வேலையும் செய்யமுடியாது, உடல் சோர்வாக இருக்கிறது என்றெல்லாம் கூறுபவர்கள் கூட, அதிகாலையில் எழுவதால், வேலைகளை செய்ய கூடுதல் நேரம் கிடைக்கும். தூக்கம் இல்லாமல் சிரமப்பட்டால் கூட அதிகாலை எழுந்து பாருங்கள், இரவில் ஆழ்ந்த உறக்கம் வரும். அதே நேரத்தில் அதிகாலையில் எழுவதற்கு, இரவு ஒன்பது முதல் பத்து மணிக்குள் உறங்கச் செல்வதும் முக்கியம்.
அதிகாலையில் நம் வீட்டில் உள்ள குழந்தைகளையும் எழுந்து பழக கற்றுக்கொடுங்கள், ஏன் என்றால் இளம் வெயிலின் அழகு நம் உடலில் பட்டாள் வேற எதுவும் இருக்கும் கிருமிகளை அழித்து எதிர்ப்பு சக்தியை கொடுக்கும், ஆகவே பெற்றோர்களே உங்கள் வெட்டு பிள்ளைகளுக்கும் கற்றிக்கொடுக்க மறவாதீர்கள், விடியற்காலை எழுவதை.
குழந்தைகளுக்கு விரைவாகப் பேச வைக்கவேண்டும் என்றாலும் கூட அதிகாலை எழுந்து பழக சொல்லுங்கள். அதிகாலை பயிற்சி கொடுப்பது கிராமங்களில் இன்றும் நடைமுறையில் உள்ள பாரம்பரிய பழக்கம்.
அதிகாலை எழுவதால் கிடைக்கும் பலனோ ஏராளம், அதை ஏதோ காரணங்கள் சொல்லி தவற விட்டு விடாதீர்கள். பெரும்பாலும் விடியற்காலையில் எழும்பொழுது நம்முடைய மூளையும், உடலும் அமைதியான சூழலில் இருக்கும், அந்தநாளில் செயல்திறன் அதிகரித்து, வாழ்க்கை தரம் உயரும். ஆகவே அதிகாலை எழும் பழக்கத்தை வழக்கமாகி கொள்வது நம்முடைய உடலுக்கும், மனதிற்கும் பெரும் அளவிலான நன்மை கொடுக்கும், என்பது உண்மை. ஆகையால் முடிந்த வரை நாம் அனைவரும் அதிகாலை எழுவதற்கு இனியாவது முயற்சி செய்வோம். நாம் மட்டும் செய்வதோடு நின்று விடாமல் நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் இதன் நன்மையை கூறுவோம்.