Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய உரிமையாளர்…. போலீஸ் நடவடிக்கை….!!

உரிய அனுமதியின்றி அதிக அளவில் பட்டாசுகளை விற்பனை செய்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிபுரம் பகுதியிலிருக்கும் காய்கறி கடை ஒன்றில் அனுமதி இல்லாமல் பட்டாசுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காய்கறி கடைக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அதிகமான பட்டாசு பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து கடை உரிமையாளர் சுந்தர் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 50-ற்கும் அதிகமான பட்டாசு பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |