திருப்பத்தூரில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை மீறி வெளியில் சுற்றித்திரிபவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை மீறி திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகள் செயல்பட்டு வந்திருக்கின்றது.
அந்த கடைகளில் சமூக இடைவெளி இன்றி, முகக்கவசம் அணியாமல், கூட்டமாக நின்றுள்ளனர். இதனால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டு வந்த 12 கடைகளுக்கு தாசில்தார் சிவப்பிரகாசம் தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இதேபோன்று கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் தலைமையில், கந்திலி கிராம பகுதியில் முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் வருபவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.