என்.எல்.சி அதிகாரி வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பூ தெருவில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் 2-வது தெர்மலில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் வேலாயுதம் தனது மனைவியுடன் சென்னையில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ளார். அதன்பின் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனையடுத்து உள்ளே சென்று பார்த்ததில் பீரோவில் வைத்திருந்த 22 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 1/2 கிலோ வெள்ளி நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்துள்ளது. இது பற்றி வேலாயுதம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.