Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அந்த காலத்தில் இருந்தே இருக்கிறோம்” பொதுமக்களின் கோரிக்கை….உறுதியளித்த அதிகாரிகள்….!!

தாங்கள் வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சமுத்திரம் ஏரியானது மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் குளம் போல் காட்சி அளித்த இந்த ஏரியானது தற்போது சுருங்கிக் கொண்டே வருகின்றது. மேலும் ஏரியின் நடுவே நான்கு வழிச் சாலை போடப்படுவதால் ஏரியானது இரண்டு பகுதியாக காணப்படுகின்றது. இந்த ஏரியின் மறு கரையில் அருள்மொழிபேட்டை என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 28 குடும்பங்கள் 300 ஆண்டுகளாக மூதாதையர் காலம் முதல் வசித்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை.

எனவே பொதுப்பணித் துறையினர் இந்த வீடுகளை இடிக்கப் போவதாக கூறி பொதுமக்களை காலி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அப்பகுதி மக்கள் வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் 10 தலைமுறையாக வசித்து வருகின்றோம் எனக் கூறுகின்றனர். இதனையடுத்து தி.மு.க ஒன்றிய செயலாளர் குமார், தி.மு.க எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா, கிராம நிர்வாக அதிகாரி பூபதி ஆகியோர் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்துள்ளனர்.

அப்போது பொதுமக்கள் எங்களுக்கு மாற்று இடம் எதுவும் வேண்டாம் என்றும் தற்போது நாங்கள் வசிக்கும் இடத்திலேயே பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
தெரிவித்துள்ளனர். மேலும் 2006-2011 திமுக ஆட்சியில் தங்களுக்கு கான்கிரிட் வீடு கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டது. ஆனால் அதன் பின் வந்த ஆட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளனர். இதனையடுத்து  தி.மு.க எம்.எல்.ஏ-ஜவாஹிருல்லா தங்களுக்கு பட்டா வழங்குவது குறித்தும், கான்கிரீட் வீடு அமைப்பது குறித்தும், முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியருடன் பேசி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு அவர் உறுதியளித்துள்ளார்.

Categories

Tech |