8 ஊராட்சி செயலாளர்ககளை வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் எட்டு ஊராட்சி செயலாளர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் 8 பேரையும் வட்டார வளர்ச்சி அலுவலர் மணவாளன் இடமாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனால் கன்னடிகுப்பம் ஊராட்சி செயலாளர் பழனி செங்கிலிகுப்பத்திற்க்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இங்கே பணிபுரிந்து வந்த சுப்பிரமணி கன்னடிகுப்பதிற்க்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து வடகரையில் இருந்த சங்கர் மின்னூரில் வேலை பார்த்து வந்த மணிவேல் வடகரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சோலூரில் இருந்த முரளி ஆலங்குப்பம் பகுதிக்கும் மற்றும் அங்கிருந்த உமாசங்கர் நாச்சார் குப்பத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பின்னர் நாச்சார் குப்பத்தில் இருந்த அண்ணாதுரை சோலூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் வீராங்குப்பம் பகுதியில் ஊராட்சியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த செந்தில்குமாரை விடுவித்து அங்கே சின்னபள்ளிகுப்பம் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்த கிருஷ்ணமூர்த்திக்கு கூடுதல் பொறுப்பை வழங்கியுள்ளனர்.