குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 36- வது வார்டுகளில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரயில்வே பீடர் சாலையில் தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வாருகாலில் கலந்து வருகின்றது.
இந்தக் குடிநீர் கழிவு நீருடன் கலந்து அப்பகுதியில் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. எனவே இந்தப்பகுதியில் குழாயில் குடிநீர் கசிவு இருப்பதாக குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் அதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சரி செய்யப்பட்ட ஒரே நாளில் குழாய் மீண்டும் உடைந்து தண்ணீர் வீணாகி வருவதை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.