பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வன விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் இருக்கும் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என சுகாதார அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்துள்ளனர்.
இதனையடுத்து சில கடைகளில் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தியது மட்டுமில்லாமல் அதனை விற்பனைக்காக வைத்திருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இதனால் அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய குற்றத்திற்காக வியாபாரிகளிடமிருந்து அபராதமாக 1700 ரூபாய் வசூலித்துள்ளனர். மேலும் அதிகாரிகள் அந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ததோடு, இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது என வியாபாரிகளை எச்சரித்துள்ளனர்.