மாவட்டம் முழுவதும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யபடுவதால் பொதுமக்கள் அந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கலெக்டர் கூறியுள்ளார்.
தமிழகத்தல் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மீண்டும் ஒரு வாரம் முழு ஊரடங்கை தமிழக முதல்வர் திரு. முக. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் போன்றவை தடையின்றி கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா பகுதிகளில் வாகனத்தின் மூலம் காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வாகனங்கள் திருப்பத்தூரில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் தினசரி வருவதனால் பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.
ஆனால் இருசக்கர வாகனத்தில் சென்று கிராம பகுதிகளில் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்வதற்கு அனுமதியில்லை. இந்த பணியினை தாசில்தார் சிவப்பிரகாசம், வேளாண்மை துறை இணை இயக்குனர் ராஜசேகர், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ரவிச்சந்திரன், உதவி வேளாண்மை துறை துணை இயக்குனர் ராகினி ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர். இதுகுறித்து சந்தேகங்கள் ஏதும் ஏற்பட்டால் திருப்பத்தூர் தாலுகா அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்: 04179220096,7708854436 தொடர்பு கொண்டு கேட்கலாம் என தாசில்தார் தெரிவித்துள்ளார்.