தென்காசியில் ஒரே நாளில் 5 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மீண்டும் டாஸ்மாக் கடை மற்றும் பேருந்து போக்குவரத்து சேவை போன்றவற்றை நேற்று முதல் 24 ம் தேதி வரை செயல்படக்கூடாது என்று உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் பல அதிகாரிகள் கிராமங்கள்தோறும் சென்று கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இதனையடுத்து அங்கு ஒரே நாளில் 385 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 206 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் அங்கு தற்போது வரை 13,847 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து 12,275 பேர் கொரோனா தொற்றிற்கான சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அங்கு 1,366 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நான்கு ஆண்கள் மற்றும் 67 வயதுடைய மூதாட்டி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால் அங்கு அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர்கள் 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.