தென்காசியில் கொரோனா பாதிக்கப்பட்டு முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல் படுத்தியது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கிலிருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பல அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகமாகி கொண்டே வருகின்றது. இதில் 55 வயதான முதியவர் ஒருவர் கடந்த 15ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து பார்த்ததில் அந்த முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மருத்துவர்கள் அந்த முதியவருக்கு அளித்த சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார் .மேலும் தென்காசி மாவட்டத்தில் தற்போது வரை 165 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அங்கு 9 ஆயிரத்து 799 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்பின் 8,806 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மேலும் 228 பேர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.