தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மீண்டும் வாரம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனையடுத்து ஒரே நாளில் 245 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 178 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தற்போது வரை பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனால் தென்காசி மாவட்டத்தில் இதுவரை 12,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 10, 468 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 1,428 பேர் கொரோனாவிற்கான சிகிச்சையை மருத்துவமனையில் பெற்று வருகின்றனர். இந்நிலையில் 55 மற்றும் 67 வயதுடைய ஆண்கள் இரண்டு பேருக்கும் 70 வயதுடைய பெண் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர்கள் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.