வேலூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டிருக்கின்றது.
இதனையடுத்து வேலூர் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த 2 நபர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு முதியவரும் தொற்றினால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதன்பின் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த 3 நபரின் சடலத்தையும் உறவினர்களிடம் பாதுகாப்புடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது.