திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் ஒரே நாளில் 644 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனாலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இந்நிலையில் திருப்பத்தூரில் கொரோனா சோதனை மேற்கொண்டதில் ஒரே நாளில் 644 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிதுள்ளனர். மேலும் 130 பேர் கொரோனவிற்கான சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இவ்வாறு அந்த மாவட்டத்தில் 1,972 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.