சீனா நாட்டில் கொரோனா நோய் தொற்றின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது.
சீனா நாட்டில் செங்க்சோவ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில்
கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் அந்தந்த மாகாணத்தின் நிர்வாகம் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. இங்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் ஐ-போன் தொழிற்சாலை இயங்கி வருகின்றது. மேலும் இந்த நிறுவனத்தில் மூன்று லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதனை அடுத்து இந்த தொழிற்சாலையில் பல ஊழியர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்குக்கு பயந்து பல ஊழியர்கள் இந்த தொழிற்சாலையை விட்டு தப்பி ஓடுகின்றனர். கொரோனா காரணமாக போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் ஊழியர்கள் 100 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தனது சொந்த ஊர்களுக்கு நடைபயணமாக செல்ல தொடங்கியுள்ளனர். அவர்கள் சாலை ஓரம் வயல்வெளிகள் மலைகளிலும் சிறிது நேரம் தஞ்சமடைந்தபடி மெதுவாக நடந்து செல்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. மேலும் சொந்த ஊர்களுக்கு நடை பயணமாக செல்லும் ஊழியர்களுக்கு உள்ளூர் மக்கள் இலவச விநியோகம் நிலையங்கள் அமைத்து உணவு வழங்கி வருகின்றனர்.