அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டமானது 105 அடியாக உள்ளது. மேலும் தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை எனப்படும் பவானிசாகர் அணையில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதன் காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளதால் விரைவில் உபரிநீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து உபரி நீர் திறக்கப்பட்டால் கரையோர இருக்கும் மக்கள் வெள்ளத்தில் சிக்கும் அபாயம் ஏற்படும் என்பதால் மாவட்ட நிர்வாகம் தண்டோரா மூலம் தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் எப்போது வேண்டுமானாலும் உபரி நீர் திறக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.