Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதில் சென்ற போது… மாட்டிக்கொண்ட கர்ப்பிணி பெண்… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

அரசு மருத்துவமனையில் லிப்டில் மாட்டிக்கொண்ட கர்ப்பிணி பெண்ணை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கரடு பகுதியில் கூலித் தொழிலாளியான கருப்பண்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சாவித்திரி என்ற மனைவி இருக்கின்றார். இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் பரிசோதனைக்காக கருப்பண்ணன் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சாவித்திரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்க கூறியுள்ளனர். இதனால் கருப்பண்ணன் தனது மனைவியை மகப்பேறு வார்டில் அனுமதிப்பதற்காக அங்குள்ள லிப்டில் சென்று தனது மனைவியை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு சாப்பாடு வாங்கி வருவதாக கூறிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் கர்ப்பிணியான சாவித்திரி தனது கணவர் சென்று நீண்ட நேரமாகியும் வராததால் அங்குள்ள லிப்ட்டில் அவர் மட்டும் தனியாக ஏறி கீழே சென்றுள்ளார். இதனையடுத்து லிப்ட் கீழே சென்று நின்றதும் சாவித்திரி அந்த கதவை  திறக்க முயற்சி செய்தபோது அதை திறக்க முடியாமல் அதிர்ச்சி அடைந்த அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி மருத்துவமனைக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் லிப்டின் கதவை கடப்பாரை கொண்டு சிறிதளவு திறந்து கர்ப்பிணி பெண்ணை பத்திரமாக மீட்டுள்ளனர். அதன்பிறகு தீயணைப்பு வீரர்கள் மீட்பு கருவியின் மூலம் லிப்டின் கதவை முழுவதுமாக திறந்து விட்டனர். இதனால் மருத்துவமனையில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |