திமுக நடத்திக் கொண்டிருக்கும் கிராமசபை கூட்டங்களை கண்டு அதிமுகவினர் அச்சம் அடைந்துள்ளனர் என்று பொருளாளர் பாலு கூறியுள்ளார்.
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் திண்டுக்கல்லில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினர். அரசு ஊழியர்கள், வணிகர்கள், விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பின்பு டி.ஆர்.பாலு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், திமுக கூட்டங்களில் மக்கள் அதிக அளவு கூடுவதால் அதிமுகவினர் அச்சமடைந்துள்ளனர். அதனால் கிராம சபை கூட்டத்தை தடுப்பதற்கு முயற்சி செய்து வருகின்றனர். அதிமுக கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. ஆனால் இதுவரை எந்த பயனுள்ள திட்டத்தையும் அவர்கள் செய்யவில்லை. அனைத்து திட்டங்களும் காகித அளவில்தான் உள்ளது.
தற்போது மக்கள் திமுக விற்கு வாக்களிக்க தயாராக இருக்கின்றனர். நடக்கவிருக்கும் தேர்தலில் நிச்சயமாக திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சர் ஆவது உறுதி, என்று கூறினார்.