Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்…. ” போலாந்து விரைந்த ஜோ பைடன் “….!!!

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவது போலாந்து நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா 26வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைனில் இருந்து மக்கள் உயிருக்கு பயந்து வெளியேறி அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த வகையில் லட்சக்கணக்கானோர் உக்ரைனின் அண்டை நாடான போலாந்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் ரஷ்ய படைகள் போலாந்த் நோட்ட அமைப்பில் உறுப்பினராக உள்ள உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவது அந்நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையில் அகதிகளாக உக்ரைனில் இருந்து வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் போலாந்து நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ரீதியில் பெரும் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் வரும் 25ம் தேதி போலாந்த் நாட்டு அதிபர் ஆண்ட்ரிச் டூடாவை அதிபர் ஜோ பைடன் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் மற்றும் போலந்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்ற விஷயங்களுக்கு இடையில் போலாந்திற்கு செல்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

Categories

Tech |