சர்வாதிகாரி கடாபியின் மகன் சையிப் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
வட ஆப்பிரிக்க நாடானா லிபியாவில் 50 வருடங்களுக்கும் மேல் மோமர் அல் கடாபி சர்வாதிகாரியாக ஆட்சி புரிந்து வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு மோமர் அல் கடாபி கிளர்ச்சிப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால் அங்கு தற்போது முகமது அல் மெனிபி அதிபராக இருந்து வருகிறார். இந்நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு வருகிற 24 மற்றும் ஜனவரி 24-ம் தேதி என 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு சர்வாதிகாரி கடாபியின் மகனான சையிப் அல் இஸ்லாம் கடாபி கடந்த மாதம் 14-ந் தேதியன்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
ஆனால் சையிப் அல் இஸ்லாம் கடாபி தனது தந்தையின் ஆட்சி காலத்தின் போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்திய குற்றசாட்டை சுட்டிக்காட்டி அவரது வேட்பு மனுவை அந்நாட்டின் தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. இதனை எதிர்த்து சையிப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம் சையிப்பை தகுதி நீக்கம் செய்யும் தேர்தல் ஆணையத்தின் முடிவை ரத்து செய்தது. மேலும் அவர் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் சர்வாதிகாரி கடாபியின் மகன் சையிப் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.