Categories
உலக செய்திகள்

“அதிபருடன் கருத்து வேறுபாடு”…. சோமாலிய பிரதமர் பதவி நீக்கம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

அதிபருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சோமாலியா பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2017-ஆம் வருடம் முதல் கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் முகமது பர்மாஜோ அதிபராக இருந்து வருகிறார். இவரின் பதவி காலம் கடந்த பிப்ரவரி மாதம் முடிந்த நிலையில் மேலும் 2 வருடங்களுக்கு தனது பதவி காலத்தை அவர் நீட்டித்து கொண்டார். இவ்விவகாரத்தில் அவருக்கும் பிரதமரான முகமது உசேன் ரோபலுக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவியது.

இதனால் அங்கு கடந்த மாதம் நடைபெற இருந்த பொதுத்தேர்தல் தள்ளிப்போனது. இதன் காரணமாக அங்கு அரசியல் குளறுபடி உருவான நிலையில் பிரதமர் ரோபல், கடற்படைக்கு சொந்தமான நிலத்தை தன் தனிப்பட்ட நலனுக்காக அபகரித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு பெறப்பட்டது.ஆனால் ரோபல் தன் மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.
இந்நிலையில் பிரதமர் ரோபல் மீதான ஊழல் குற்றச்சாட்டை காரணம் காட்டி அதிபர் பர்மாஜோ நேற்று அவரை பதவி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் இந்த ஊழல் குறித்து கடற்படை தளபதியையும் அவர் பதவியில் இருந்து நீக்கினார். இவ்வாறு ஊழல் குற்றச்சாட்டில் பிரதமரை அதிபர் பதவி நீக்கம் செய்தது சோமாலியா அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |