ஜேம்ஸ் கேமரூன் இயக்கி இருக்கும் அவதார்-2 திரைப்படம் சென்ற வாரம் இந்தியாவில் 6 மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிக்கும் “ஆதி புருஷ்” என்ற பான் இந்தியா திரைப்படத்தை மோஷன் கேப்சரிங் முறையில் படமாக்கி இருக்கிறார்கள்.
இந்த படத்தின் டீசர் வெளியாகி விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் காட்சிகள் மோசமாக இருந்ததாக கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. இதன் காரணமாக இன்னும் சிறப்பாக ஆதி புருஷ் படத்தை உருவாக்கும் வகையில் 2023 ஜனவரி 12ஆம் தேதி வெளியீட்டில் இருந்து ஜுன் 16ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர். இதனிடையில் அவதார்- 2 படத்தின் விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் காட்சிகள் ரசிகர்களை வியக்கும் அளவுக்கு இருக்கிறது.
இதன் முதல் பாகத்தில் தரையில் நடைபெற்ற அந்த சாகசக்காட்சிகள் 2ம் பாகத்தில் தண்ணீரில் நடக்கிறது. இந்த படம் தற்போது வெளிவந்துள்ளதால் அதுபோன்ற ஒரு எதிர்பார்ப்பு “ஆதி புருஷ்” படத்திற்கும் இருக்கும். எனினும் அவதார் 2 அளவுக்கெல்லாம் செலவு செய்ய இயலாது. எனினும் ஆதி புருஷ் திரைப்படத்திற்கு ஒரு சவால் காத்திருக்கிறது என டோலிவுட்டில் தற்போதே பேச தொடங்கிவிட்டனர்.