பல இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிரியாவில் இருந்து துருக்கியின் தெற்கு காசியான்டெப் மாகாணத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த நபர், இஸ்தான்புல் நகரில் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டு முக்கிய வீதிகளை உலவு பார்த்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து தாக்குதல் நடத்த எண்ணிய நபர், குக்குசெக்மீஸ் மாவட்டத்தில் ஓட்டல் அறையில் தங்கியிருந்ததாக தகவல் கிடைத்து, அங்கு சென்ற உளவுத்துறை மற்றும் பயங்கரவாத தடுப்பு போலீசார் கைது அவரை செய்தனர்.
மேலும் அந்த நபர் தங்கியிருந்த அறையில் சோதனை செய்து பார்த்தபோது அங்கிருந்த கட்டிலுக்கு அடியில் துப்பாக்கி, தோட்டாக்களை மறைத்து வைத்திருப்பதை கண்டு அந்த பொருட்கள் அனைத்தையும் பத்திரமாக போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட நபர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவன் என்றும் துருக்கியில் மட்டுமில்லாமல் பல இடங்களில் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.