நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சினம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் கதாநாயகனாகவும் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் தற்போது ‘சினம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது . இந்த படத்தில் பாலக் லால்வாணி , காளி வெங்கட் உட்பட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் ஜி என் குமரவேலன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சபீர் இசையமைத்துள்ளார் . இந்தப் படத்தை மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது ‘சினம்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இந்த டீசரில் ‘தப்பைக் கண்டு ஒவ்வொருத்தருக்கும் கோபம் வரவேண்டும் அவ்வாறு கோபம் வந்தால் தான் தப்பு செய்றவன் பயப்படுவான், பயப்படனும்’ என்ற மிரட்டலான வசனம் இடம்பெற்றுள்ளது . வில்லன்களால் பாதிக்கப்பட்ட ஹீரோ அவர்களை பழி வாங்கும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படம் என்பது தெரிகிறது .