Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அதிரசம் எண்ணெயில் போட்டவுடன் கரையுதா ……..கவலையை விடுங்க ..

அதிரசம்

தேவையான பொருட்கள் :

பச்சரிசி  –  2  கப்

வெல்லம் –  1  1/2  கப்

ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன்

சுக்குத்தூள் –  1/4  டீஸ்பூன்

நெய் – 1 டேபிள் ஸ்பூன்

அதிரசம்க்கான பட முடிவுகள்

செய்முறை :

முதலில் பச்சரிசியை ஒரு மணிநேரம் ஊறவிட்டு வடித்து 20 நிமிடங்கள் உலர விட வேண்டும். பின் இதனை நைசாக அரைத்து சலித்துக் கொள்ள வேண்டும் . கடாயில் சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு  வடிகட்டி பின்  பாகு காய்த்துக் கொள்ள வேண்டும் . பின் இதனுடன் சுக்குத்தூள் , ஏலக்காய் தூள் , நெய் சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கி , அரிசி மாவு சேர்த்து கிளற வேண்டும் . இந்த மாவை  ஒரு வாரம் வரை வைத்து பயன்படுத்தலாம் . இந்த மாவை அதிரசமாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் சூப்பரான அதிரசம் தயார் !!!

குறிப்பு : பச்சரிசி கொஞ்சம் குண்டு அரிசியாக பார்த்து வாங்க வேண்டும் . பாகு,  கம்பி பதத்திற்கு  முந்தைய நிலையில் இருக்க வேண்டும் .

 

Categories

Tech |