தீபாவளி பண்டிகை என்றாலே இனிப்பு பண்டங்களுக்கும் பட்டாசுகளுக்கும் குறைவிருக்காது. இனிப்பு பண்டங்களில் அதிரசம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அத்தகைய சுவை நிறைந்த அதிரசத்தை தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 400 கிராம், ஏலக்காய் – 5, சுக்கு – சிறிதளவு, வெல்லம் – 300 கிராம், எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு 1½ மணி நேரம் ஊறவைத்து பிறகு தண்ணீரை நன்கு வடித்து அரிசியை மட்டும் தனியே எடுத்து கொள்ள வேண்டும்.
அதன் பின் அரிசியை ஒரு ஈரம் இல்லாத துணியில்போட்டு, நிழலில் காய வைக்க வேண்டும். அரிசி பாதி அளவு காய்ந்தவுடன் அதனை மிக்சிஜாரில் போட்டு அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
பிறகு இந்த மாவினை எடுத்து சலித்து அதனை தனியாக வைத்து கொள்ள வேண்டும். இதனையடுத்து வெல்லத்தை இடித்து எடுத்து கொள்ள வேண்டும். மேலும் ஏலக்காய், சுக்கு ஆகியவற்றை மிக்சிஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.
அந்த கலவையை நாம் இடித்து எடுத்து வைத்த மாவுடன் சேர்த்து கொள்ள வேண்டும். இதனைத்தொடர்ந்து இடிச்சுவச்ச வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில தண்ணீர் ஊற்றிகாய்ச்சி பாகு எடுத்து கொள்ள வேண்டும். பிறகு வெல்லப் பாகை வடிகட்டி சிறிது சிறிதாக அரிசிமாவில் சேர்த்து கட்டி விலாதவாறு கிளற வேண்டும்.
இப்பஅரிசிமாவினை சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும் வரை பிசைந்து வைத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி காய வைத்து கொள்ள வேண்டும். அதப்பின் அதிரசம் மாவினை எடுத்து வடை போன்று தட்டி எண்ணெயில் போட வேண்டும்.
ஒருபுறம் வெந்ததும் அதிரசத்தை மறுபுறம் திருப்பி போட்டு நன்கு வேக வைக்க வேண்டும். எண்ணெய்யில் போட்ட அதிரசமானது நிறம் மாறியவுடன் தனியாக எடுத்து வைத்து விட வேண்டும். இப்போது சுவையான அதிரசம் தயார்.