தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியடையவில்லை. அதனைத் தொடர்ந்து விஷால் தற்போது லத்தி, மார்க் ஆண்டனி படங்களில் நடித்து வருகிறார். வினோத்குமார் இயக்கும் லத்தி படத்தை ராணா-நந்தா ஆகியோர் தயாரித்துள்ளார்கள். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார்.
யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. அதிரடியான ஆக்ஷன் கதையில் உருவாகி உள்ள இந்த படத்தில் சண்டை காட்சிகளின் நடித்த போது இரண்டு முறை விஷாலுக்கு பல தான் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் லத்தி படத்தின் முதல் சிங்கிள் பாடல் வருகின்ற அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஒரு வீடியோ மூலம் படக்குழு தெரிவித்துள்ளது.