Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘அதிர்ச்சி’ …. “ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு”….கொரோனா உறுதி ….!!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய அணியின் இளம் ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால்  அவர் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ள வீரர்கள் மும்பையில் முகாமிட்டு உள்ளனர் அவர்கள் இன்னும் ஒருசில தினங்களில் தென்னாப்பிரிக்காவுக்கு புறப்படுவார்கள் என தெரிகின்றது. இந்த நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியின் மற்ற வீரர்களுடன் விமானத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் அவர் தனியாக மாற்று தேதியில் தென்னாப்பிரிக்காவுக்கு செல்வாரா என்பது குறித்து பிசிசிஐ  தெரிவிக்கவில்லை. இதற்கு முன்னதாக காயம் காரணமாக கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிய வாஷிங்டன் சுந்தர் காயத்திலிருந்து குணமடைந்தது உள்ளூர் போட்டிகளில் விளையாடினார். மேலும் சமீபத்தில் நடந்த  விஜய் ஹசாரே போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Categories

Tech |