Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நடந்த அதிர்ச்சி சம்பவம்…. காவல்துறையினர் மீது நடவடிக்கை…. வேலூரில் பரபரப்பு….!!

சாராய ரோந்து பணிக்காக சென்று வீடுகளில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மூன்று காவல்துறையினர் கைது செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு தாலுக்கா நச்சுமேடு மலைப்பகுதியில் அரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன்,காவல்துறையினர் யுவராஜ், இளையராஜா மற்றும் ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் சாராய ரோந்து பணிக்காக சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினரை கண்டதும் அந்தப்பகுதியில் இருந்த சாராயம் வியாபாரிகள் அடித்துப் பிடித்து ஓடிவிட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அங்கிருந்த சாராய அடுப்பை அடித்து நொறுக்கி ஊறல்களை அழித்துள்ளனர். அதன்பின் நச்சுமேடு மலைகிராமத்தில் உள்ள வீடுகளில் சாராய பாக்கெட்டுகள் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது பூட்டியிருக்கும் சில வீட்டின் கதவை மற்றும் பீரோவை உடைத்து சோதனை செய்ததில் இரண்டு வீடுகளில் இருந்து 8 1/2 லட்சம் ரூபாய் மற்றும் 15 பவுன் தங்க நகைகளை காவல்துறையினர் எடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து மலைகிராம மக்கள் காவல்துறையினரை முற்றுகையிட்டு பணம் மற்றும் நகையை தங்களிடம் தரும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வீடுகளில் இருந்து எடுக்கப்பட்ட பணம் மற்றும் நகையை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில் நச்சுமேடு மலைகிராம மக்கள் அரியூர் காவல் நிலையத்தில் இருந்து  சாராய ரோந்து பணிக்காக மலைப்பகுதிக்கு வந்து வீட்டின் கதவை மற்றும் பீரோவை உடைத்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் புகாரின்படி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன், காவல்துறையினர் யுவராஜ், இளையராஜா மற்றும் ஊர்க்காவல் படை வீரர் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளார். இதனையடுத்து நச்சுமேடு மலைகிராமத்தில் சாராய ரோந்து பணிக்கு சென்ற இடத்தில் பூட்டியிருந்த வீடுகளில் நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்ததாக சப்- இன்ஸ்பெக்டர் உட்பட மூன்று காவல்துறையினர் மீது 2 பிரிவுகளில் அரியூர் காவல் நிலையத்தில் வழக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டு மாலை வேளையில் மூன்று  கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து அரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், காவல்துறையினர் இளையராஜா, யுவராஜ் ஆகிய 3 பேரையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |