Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி!….ஓபிஎஸ் பண்ணை வீட்டில் திருட்டு….. பெரும் பரபரப்பு….!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் கைலாசப்பட்டி பகுதியில் அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு உள்ளது. இந்த பண்ணை வீட்டில் கீழ் உள்ள இரண்டு அறைகள் உள்ளது. அந்த வீட்டின் மாடியில் ஓபிஎஸ் ஓய்வெடுக்கும் அறை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ஓபிஎஸின் பண்ணை வீட்டில் மேல்புறம் உள்ள சுவரின் வழியாக ஏரி குதித்த கொள்ளையர்கள் ஓபிஎஸ் ஓய்வு எடுக்கும் மேல் மாடியில் உள்ள அறையின் கதவை உடைத்து அந்த அறையில் இருந்த பீரோவை உடைத்து பார்த்ததில் நகை மற்றும் பணம், பொருள்கள் ஆகியவற்றை ஏதும் இல்லாத நிலையில், 54 இன்ச் டிவியை மட்டும் கொள்ளையர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து இன்று காலை வழக்கம் போல் பாதுகாவலர்கள் சென்றபோது மேல்மாடியில் அறை உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து பெரியகுளம் தென்கரை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்களை கொண்டு சம்பவ இடத்தை ஆய்வு செய்து முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ஓபிஎஸின் பண்ணை வீட்டில் கொல்லை முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீதா உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரியகுளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |