Categories
சினிமா தமிழ் சினிமா

அதிர்ச்சி!…. பிரபல திரைப்பட வசனகர்த்தா மறைவு…. இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்த 1000 திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர் தாஸ்(91).  இவர் நேற்று வயது மூப்பு காரணமாக தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவரின் இறப்புக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். “திருவாரூர் மண்ணில் பிறந்த ஆயிரம் திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரை உலகில் தனி முத்திரைப் பதித்த முதுபெரும் வசனகர்த்தா ஆரூர் தாஸ் அவர்கள் முதுமை காரணமாக மறைவெய்தினார் என்பதை அறிந்து மிகுந்த துயரமுற்றேன்‌. அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை கடந்த ஜூன் 3 ஆம் தேதி ஆரூர் தாஸ் அவர்களின் இல்லத்திற்கு சென்று வழங்கி மகிழ்ந்தேன்.

அதனைத்தொடர்ந்து தனது சொந்த ஊரான திருவாரூடன் இயற்பெயரான ஏசுதாஸின் பிற்பாடு இணைத்து ஆரூர் தாஸ் என பெயர் வைத்துக்கொண்டு தான் பிறந்த மண்ணை பெருமைப்படுத்தியவர் ஆருர்தாஸ் அவர்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோரது பெரும்பாலான படங்களுக்கு திரைகதை, வசனம் எழுதிய இவர் பாமரமக்கள் மனதிலும் ‘பாசமலர்’ திரைப்படம் வசனங்கள் மூலம் நீங்கா இடம் பெற்றார். தன் வசனங்களின் மூலம் திரையுலகை ஆண்ட அவர் தற்போது நம்மிடம் இல்லை என்றாலும் அவர் ஆற்றிய கலைப்பணிகள் என்றென்றும் தமிழ் திரையுலகிலும் படங்களை பார்த்து ரசித்த நெஞ்சங்களிலும் நிலைத்து நிற்கும். கதை வசனகர்த்தா ஆரூர் தாஸ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கலை உலகினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |