வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மொளகரம்பட்டி கிராமத்தில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹவுசிங் போர்டு பகுதியில் ஆட்டோ மொபைல் கடை ஒன்று நடத்தி வருகின்றார். இதனையடுத்து குணசேகரன் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள அவரது மகன் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு வந்துள்ளார்.
அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த குணசேகரன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 50 ஆயிரம் ரூபாய், 5 பவுன் நகை, டிவி ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து குணசேகரன் கந்திலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.