Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த தாய்…. அதிர்ச்சியடைந்த மகள்…. திருப்பத்தூரில் சோகம்….!!

வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உமர்நகர் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகின்றார். இவரது மனைவி சாயிதா என்ற சைதமா தனது கணவரை பிரிந்து 18 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனையடுத்து ஒரு திருமண நிகழ்ச்சிக்காக மகள் மட்டும் சென்றதால் சைதமா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் மகள் திருமண நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்தபோது அவருடைய தாய் சைதமா நிர்வாண நிலையில் உடலில் பல இடங்களில் காயங்களுடன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது வீட்டில் இருந்த இரும்பு கட்டில் மற்றும் இதர பொருட்கள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் வாணியம்பாடி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் இரவு சுமார் 11 மணியளவில் ஒருவர் சைதமாவின் வீட்டிற்கு வந்து விட்டு சென்றதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் சைதமாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வீட்டிற்கு வந்து சென்ற மர்ம நபர் யார் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |