Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட ஷட்டர் பூட்டு…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. போலீஸ் வலைவீச்சு….!!

பல்பொருள் அங்காடியின் ஷட்டர் பூட்டை உடைத்து வெள்ளிக்காசுகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள பஞ்சு காளிப்பட்டி பகுதியில் கோவிந்தன் மகன் பிரபாகரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஓமலூர்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பல்பொருள் அங்காடி நடத்தி வருகின்றார். இந்நிலையில் பிரபாகரன் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பிரபாகரன் மறுநாள் காலையில் கடைக்குச் சென்றபோது ஷட்டர் திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் பிரபாகரன் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது டிராயரில் வைக்கப்பட்டிருந்த 27 ஆயிரம் ரூபாய் மற்றும் 800 கிராம் வெள்ளிக்காசுகள் திருட்டு போனது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து கடையில் உள்ளே இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவை பிரபாகரன் பார்த்தபோது அதில் 3 பேர் கடைக்கு வருவது தெரியவந்தது. மேலும் அவர்கள் ஷட்டரை கம்பி போட்டு தூக்கி ஒருவர் உள்ளே புகுந்து டிராயரில் இருந்த பணம் மற்றும் வெள்ளிகாசுகளை எடுப்பதும், வெளியில் 2 பேர் காவலுக்காக நின்ற காட்சிகளும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது. இதுகுறித்து பிரபாகரன் ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. கேமராவில் பதிவான நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |