Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கல்லாப்பெட்டியை பார்த்ததும்…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

பல்பொருள் அங்காடியில் மர்ம நபர்கள் பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் முஸம்மில் என்பவர் வெளிமாநில பொருட்களை விற்கும் பல்பொருள் அங்காடி ஒன்றுநடத்தி வருகின்றார். இதனையடுத்து வழக்கம்போல் இரவு 9 மணி அளவில் வியாபாரத்தை முடித்து பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். அதன்பின் மறுநாள் காலையில் அவ்வழியாக சென்று கொண்டிருக்கும் போது தனது கடையின் பூட்டு மற்றும் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனைத்தொடர்ந்து முஸம்மில் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த 4 ஆயிரம் ரூபாய் மற்றும் பெரும்பாலான வெளிநாட்டு பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.இதுகுறித்து தகவலறிந்த புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து முஸம்மில் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |