Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி!…. கால்களை இழந்த கால்பந்து வீராங்கனை…. கதறும் பெற்றோர்கள்…!!!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிரியா(17) தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு பயிற்சியின் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது தெரியவந்தது. இது குறித்து அறுவை சிகிச்சை செய்து காலில் வலி குறையவில்லை. அதன் பிறகு செய்த பரிசோதனையில் அவருக்கு காலில் அனைத்து தசைகளும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்து காலை அகற்றாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில், அவரது கால்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மருத்துவர்களின் அலட்சியப் போக்கும் மற்றும் தவறான சிகிச்சையை அவர் காலை இழக்க காரணம் என்றும் இதற்கு மருத்துவ குழு மீது உரை நடவடிக்கை எடுத்து மகளின் வாழ்வாதத்திற்கு அரசு வேலை அமைத்து தரவேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |