மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கொச்சின் அம்மினி. இவர் 12 வயதிலேயே நாடகங்களில் நடித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து உள்ளார். பாடல்களும் பாடியிருக்கிறார். கன்னடம் பச்ச கொட்டட்டு, தூக்குகள் கதா பரயனு, உன்னியர்சா, அடிமகல் உள்ளிட்ட படத்தில் பின்னணி குரல் கொடுத்து இருக்கிறார். சாரதா, கே.ஆர்.விஜயா, பி.எஸ்.சரோஜா, விஜயநிர்மலா, உஷா குமாரி உள்ளிட்டா பலருக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். இவர் நிறைய விருதுகளும் பெற்றுள்ளார்.
இவரின் கணவர் ஜான் குருஷ் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்நிலையில் 80 வயதான கொச்சின் அம்மினிக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கொச்சின் அம்மினி மரணம் அடைந்தார். இவரின் மரணத்திற்கு திரை பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.