இங்கிலாந்து நாட்டிலிருந்து வெளியேறிய இளவரசர் ஹாரி தற்போது தங்களுக்கு பிறந்த மகளை குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் இருந்து வெளியேறிய ஹரி-மேகன் தம்பதியர் தற்போது அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்கள். இந்த இரு தம்பதியருக்கும் கடந்த ஜூன் மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் இளவரசர் ஹரி தன்னுடைய மகள் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது தன்னுடைய மகளான லிலிபெட் டயானா மிகவும் குளிர்ச்சியானவள் என்றுள்ளார். மேலும் மேகனும் நானும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தன்னுடைய மகனான ஆரச்சி இதுவரை ஒரே இடத்தில் உட்கார்ந்ததே இல்லை, அங்குமிங்கும் ஓடிக் கொண்டே இருப்பான் என்றுள்ளார்.