ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார் .
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்புவில் உள்ள பிரதேசா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை அணி 262 ரன்களை குவித்தது .இதன்பிறகு களம் இறங்கிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனான ஷிகர் தவான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் குவித்தார். இதன் மூலம் தவான் 6 ஆயிரம் ரன்களை கடந்தார் .
🚨 Milestone Alert 🚨
Congratulations to @SDhawan25 on completing 6⃣0⃣0⃣0⃣ ODI runs 👏 👏 #TeamIndia #SLvIND
Follow the match 👉 https://t.co/rf0sHqdzSK pic.twitter.com/OaEFDeF2jB
— BCCI (@BCCI) July 18, 2021
அத்துடன் குறைந்த இன்னிங்சில் ஒருநாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடந்த 4-வது வீரராக ஷிகர் தவான் உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலிக்கு அடுத்ததாக குறைந்த இன்னிங்சில் ஷிகர் தவான் 6 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார் . இதில் விராட் கோலி 136 இன்னிங்சில் 6 ஆயிரம் ரன்கள் ,ஷிகர் தவான் 140 இன்னிங்சில் 6 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். அதுமட்டுமில்லாமல் சர்வதேச ஒரு நாள் போட்டி கேப்டன்சி அறிமுகப் போட்டியில் அரை சதத்தை கடந்த 6-வது வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். இதற்கு முன்பு அஜித் வடேகர், ரவிசாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர், அஜய் ஜடேஜா, தோனிஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர் .