மோட்டார் சைக்கிளின் மீது அமரர் ஊர்தி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளிக்குறிச்சி பகுதியில் பாலு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாலு வேலையை முடித்து விட்டு வன்னிக்கோட்டை பகுதியில் இருக்கும் வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அமரர் ஊர்தி ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது.
இதனையடுத்து அந்த அமரர் ஊர்தி பாலுவின் மோட்டார் சைக்கிளின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் பாலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலுவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்தை ஏற்படுத்தி விட்டுச் சென்ற அமரர் ஊர்தி டிரைவரின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.