Categories
கிரிக்கெட் விளையாட்டு

அதிரடி காட்டிய கே.எல்.ராகுல்…! 180 ரன்களை ஆர்சிபி-க்கு … வெற்றி இலக்காக வைத்த பஞ்சாப் …!!!

கே.எல்.ராகுலின் சிறப்பான ஆட்டத்தினால் ,179 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் குவித்துள்ளது .

14 வது  ஐ.பி.எல் தொடரின் , 26 வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்  மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள  நரேந்திர மோடி  ஸ்டேடியத்தில், நடைபெற்று வருகிறது  . இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி , பீல்டிங்கை  தேர்வு செய்ததால், பஞ்சாப் அணி பேட்டிங்கில் களமிறங்கியது.தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் பிரப்சிம்ரன் சிங்  ஜோடி களமிறங்கினர் .இதில் பிரப்சிம்ரன் 7 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்து கிறிஸ் கெயில் , 24  பந்துகளில்  6 பவுண்டரி , 2 சிக்ஸர்கள் அடித்து 46 ரன்களில் வெளியேறினார் .

அடுத்தாக களமிறங்கிய  பூரன் 0, தீபக் ஹூடா  5 ரன் மற்றும்  ஷாருக்கான் 0 ஆகியோர் ஆட்டமிழந்தனர்  .இறுதியாக களமிறங்கிய ஹர்பிரீத்,ராகுலுடன் ஜோடி சேர்ந்தார் .இதில் கடைசி ஓவரில் இருவரும் இணைத்து ,22 ரன்களை குவித்தனர் . இறுதிவரை அட்டமிழக்காமல் ஆடிய ராகுல் 91 ரன்கள் மற்றும் ஹர்பிரீத் 25 ரன்கள் எடுக்க ,இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவரில்  5 விக்கெட்டை இழந்து 179 ரன்களை குவித்துள்ளது .அடுத்து களமிறங்கியுள்ள பெங்களூர் அணி 180 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடி வருகிறது .

Categories

Tech |