ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலுள்ள வித்யாதர் நகரில் சரோஜ் என்பவர் வசித்து வந்தார். இவருடைய கணவர் கடந்த 27 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் சென்ற டிசம்பர் 11ம் தேதியன்று இளைஞர் அனுஜ், தன் அத்தையான சரோஜை கொடூரமாக கொலை செய்து 10 துண்டாக வெட்டி சமையலறையில் மறைத்து வைத்து உள்ளார். இதையடுத்து ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு சென்று துண்டாக வெட்டிய உடல் உறுப்புகளை அப்புறப்படுத்தி வந்திருக்கிறார்.
இதையடுத்து சரோஜின் மகளான பூஜாவிடம், “அம்மாவை காணவில்லை என்றும் இதனால் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளதாகவும்” அனுஜ் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பூஜா, அனுஜ் கூறியதை உண்மை என நம்பவில்லை. இதற்கிடையில் சென்ற டிசம்பர் 13ம் தேதியன்று பூஜா அனுஜின் வீட்டிற்கு சென்றார். அப்போது அனுஜ் தன் சமையலறையிலிருந்த ரத்தத்தை சுத்தம் செய்து உள்ளார்.
இதனை பார்த்த பூஜா, எப்படி இங்கு ரத்தம் வந்தது என கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த அனுஜ், தன் மூக்கில் இருந்து ரத்தல் கசிவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இதன் காரணமாக சந்தேகமடைந்த பூஜா இது பற்றி தன் சகோதரியிடம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், வீட்டை சோதனை செய்ததில் அனுஜ் கொலை செய்தது உறுதியாகியது. அதன்பின் காவல்துறையினர் அனுஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.