அத்தியாவசிய பொருட்களின் விலையானது உயர்ந்துள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை வரை வீடுகளில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையானது 1400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதன் விலை தற்போது அதிகரித்து 2, 657 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் ஒரு லிட்டர் பாலின் விலையும் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் அத்தியாவசிய பொருட்களான கோதுமை மாவு, சர்க்கரை போன்றவற்றின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. குறிப்பாக சமையல் எரிவாயுவின் விலையானது கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் சமூக இணையதளங்களில் தங்களது அதிருப்தியினை தெரிவித்துள்ளனர்.